This page uses Unicode Font

ராகம்: ராகமலிகை

தாளம்: ஆதி

பாடல்: யாழ்ப்பாணம் வீரமணி ஐயர்

பாடியவர்: T M சௌந்தரராஜன்



பல்லவி

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வா யம்மா! - கற்பக

அனுபல்லவி

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

சிற்பம் நிறைந்த உயர் சிங்கார கோயில் கொண்ட - கற்பக

சரணம்

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்

நானிந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ

ஏனிந்த மௌன மம்மா ஏழை எனக்கருள

ஆனந்த பைரவியே ஆதரித்தாளு மம்மா! - கற்பக




எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்

நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய

கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த

உல்லாசியே உமாஉனை நம்பினே னம்மா! - கற்பக



நாகேஷ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்

வாகீஷ்வரி மாயே வாராயிது தருணம்

பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த

லோகேஷ்வரி நீயே உலகினில் துணையம்மா! - கற்பக



அஞ்சன மையிடும் அம்பிகை எம்பிரான்

கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் - அருள்

தஞ்சம்என அடைந்தேன் தாயெ உன் சேய் நான்

ரஞ்சனியே ரட்ஷிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா - கற்பக

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page
Return to Top