நாவலர் பாடல்பெற்ற சிவஸ்தலம்

- அராலியூர் அமரர் வெ. சு. நடராசா -

ராலி மேற்கில் ஐந்தாங் குரவர் எனப் போற்றப்படும் ஆறுமுகநாவலர் பாடல்பெற்ற சிவஸ்தலம் உண்டு. இவ்வூருக்கு வண்ணபுரம் என்று மறுநாமமுண்டு. இங்கே கோயில் கொண்டருளியிருக்கும் பெருமானது பெயர் விசுவநாதர். அம்மையார் பெயர் விசாலாட்சி. தற்போதுள்ள ஆலயம் 1773ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி அத்திவாரமிடப்பட்டது. காசியம்பதியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கமே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாவலர் பெருமானது பாமாலையின் வரலாற்றை கவியோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியவர்கள் தமது நாவலர் பெருமான் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"நள வருஷம் சித்திரை மாதம் ஐந்தாம் தேதி (ஏப்ரல் 1856) வண்ணவுரம் என்னும் அராலியில் விநாயகரைச் செல்லையாக் குருக்கள் பிரதிஷ்டை செய்தார். செல்லையாக் குருக்கள் கோயில் ஆதீனஸ்தர்! அர்ச்சகர். சைவாகம அறிஞர். அவர் நாவலரை அழைத்தார். இச்சமயங்களில் நாவலர் சிறப்பான காணிக்கை நிவேதனம் கொண்டு செல்வதுண்டு. நாவலர் பட்டு, பழம் முதலியன கொண்டுவரும்படி வேலையாளரிடம் திட்டம் செய்திருந்தார். அவன் மறந்து போனான். வண்ணபுரத்துக்கும் நல்லூருக்கும் ஏழு மைல் சென்றுவர நேரமில்லை. அந்த ஊரிலும்  சாமான் கிடைக்காது. ஆகையால் நாவலர் பூமாலைக்கும் கனிகளுக்கும் பதிலாக முக்கனியிலும் பாமாலை புனைந்து சூட்டினார். மூன்று பாமாலைகள். ஒன்று சித்தி விநாயகருக்கு; இரண்டு விசுவநாதருக்கு, மூன்று விசாலாட்சியம்மைக்கு".

அராலிச் சித்தி விநாயகர் விருத்தம்

- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் -

 

சித்தி விநாயகர் துதி

சீரேறு கருணையுரு வாயவிசு

வேசனோடு திகழ்விசா

லாட்சி தந்த

செல்வமே யடியவர்க

ளினிதுண்ணவுண்ணத்

தெவிட்டாத

தென்னமுதமே!

 

பேரேறு மறிவிச்சை

தொழிலென்றுமதமூன்று

பெருகு மானந்த வடிவே,

பிரணவப் பொருளே

யெனுன் னுறவேயெ

துள்ளமே

பேசியிரு கண்ணின்

மணியே!

 

காரேறு பெருமானொ

டயன்முதலி யாவருங்

காணரிய நினதிரண்டு

கழல்பணிந் திடின்மகப்

பேறுமுத லியாவையும்

கைகட்ட லரிதாகுமோ?

வாரேறு களபயரி மனவருவு

முபயமூலை

வலவையுள மகிழ்

கொழுநனே

வண்டுமது வுண்டலவு

தண்டலை யராலிநகர்

வாழ்சித்தி வேழமுகனே!

 

விசுவநாதர் துதி

உலகெலர மாகிலே றாயுடனு

மாய்நின்ற

உண்மையறி வின்ப

வடிவே

ஒங்குமீ சனாதி சத்தியஞ்

சகமே மெய்

யுருவெனக் கொண்ட

முதலே

அலகிலாமுற்றறிவ முதலறு

குணங்களா

றங்கமென வுடைய யரனே

அவனிமுதன் மூர்த்தமெட்

டுடையவனாய்ச் சர்வாதி

யட்டநா மங்கொள்

சிவனே...

 

விசாலாட்சியம்மை துதி

கொன்பூத்த விமயப்

பொருப்பதவு புதல்வியே

போதாவா னந்த

வடிவே!

பொலுமென் னான்கறம்

வளர்த்தருளு மன்னையே

போகுவர

வற்ற பெருமானே

கொன்பூத்த அயில்வேற்

குமாரனைத் தந்தநிர்க்

குணவிடப் பாலம் மையே

கொலவுவரை யாதியைஞ்

சத்திவடி வாய்நின்ற

கோதின் கருணாவாரியே

மின்பூத்த கொடியிடை

கொள்

சயசலகலை மகள்பணிவு

மேன்மையுறுமாதேவியே,

மிக்கபா மான்சாத்

திடுமடியர் வேண்டுவன

தென்பூத்த நினதுபத

மலரிறைஞ் சிடுமடியர்

சிந்தித்த வரமருள்

செய்வாய்;

செங்கமல மலர்வாணி

தங்கிடுமராலிநகர்

திகழ்விசா லாட்சி

யுமையே!

பதிவு: 26 ஜனவரி 2006

Home Page Kids Page Arumuga Navalar's home page Yogaswami's home page

Return to Top