நாவலரும் சாதியும்
சாதியினுஞ் சமயமே அதிகம். சமயத்தினுஞ் சாதி அதிகமெனக்கொள்வது சுருதி, யுத்தி. அநுபவமூன்றுக்கும் முழுமையும் விரோதம். உலகத்துச் சாதி பேதம் போலச் சற்சமயமாகிய சைவ சமயத்தினும் முதற்சாதி, இரண்டாஞ்சாதி, மூன்றாஞ்சாதி, நாலாஞ் சாதி, நீசசாதியெனச் சமயநடை பற்றி ஐந்து சாதி கொள்ளப்படும். சிவாகமத்தில் விதிக்கப்பட்ட நான்குபாத முறைப்படி வழுவற நடந்து சிவானந்தப் பெரும் பேறு பெற்ற சீவன்முத்தர் சிவமே யாவர்.
இனிச் சிவஞானிகள் முதற்சாதி; சிவயோகிகள் இரண்டாஞ்சாதி: சிவக்கிரியாவான்கள் மூன்றாஞ்சாதி; சிவசரியாவான்கள் நாலாஞ்சாதி; இந்நெறிகளில் வராதவர்களும், இவர்களையும் இவர்கள் சாத்திர முதலியவற்றையும் நிந்திப்பவர்களும். இந்நெறிகளிலே முறை பிறழ்ந்து நடக்கின்றவர்களும், இந்த நடைகளை விட்ட பதிதர்களும், சதா சூதகிகளாகிய பஞ்சமசாதி. சிவசரியை, கிரியை முதலியவைகளினாலே பொருள் தேடி, உடம்பை வளர்ப்பவர்களும், அப்பொருள்களைப் பாசத்தாருக்குக் கொடுத்து இன்புறுவோர்களும், கோயிலதிகாரிகளாய்த் தேவத் திரவியத்தைப் புசிப்பவர்களும், விருத்திப்பொருட்டுச் சிவ வேடந்தரித்தவர்களும், விருத்திப்பொருட்டுத் துறவறம் பூண்டோர்களும், சிவஞான நூல்களைச் சொல்லிப் பொருள் வாங்கி வயிறு வளர்ப்பவர்களும் பிறரும் பதிதர்களுள் அடங்குவார்கள். உண்மை நாயன்மார் மகிமை, பெரிய புராண வசனம், ஆறுமுக நாவலர் பார்க்க: ஆறுமுக நாவலரின் பன்முக ஆளுமையும் சாதி, சமய, சமூகப் பார்வையும் ஒரு மீளாய்வுபதிவு: 15 ஆகத்து 2020