நாவலர் பார்வையில்
திருக்குறள்
"திருக்குறளைத் தமிழ்வேதம் எனவும்
திருவள்ளுவரைத் தமிழ் வழங்கும்
நிலமெங்கும் நல்லறிவுச் சுடர் கொழுத்திய
தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்"
- ஆறுமுக நாவலர்
திருக்குறளை அதன் பரிமேலழகரிரையுடன் பிழையறப் பதிப்பித்த முதல்வர் என்ற சிறப்பு
நாவலருக்கு உரியது. தமிழகத்தில் தமிழ்ப் பேரறிஞராகத் திகழ்ந்த மறைமலையடிகள் தம்
இளமைக் காலத்தே திருக்குறளைப் பயில்வதற்கு நாவலர் பதிப்பித்த உரையே பெருந்துணையாக
அமைந்த தென்பதை நினைவு கூர்ந்துள்ளார்.