பாடியவர்: D K
பட்டம்மாள்
கிளிக்கண்ணி
வள்ளிக் கணவன் பேரை
வழிப்போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி - கிளியே
ஊனும் உருகிதடி
மாலை வடிவேலவர்க்கு
வரிசையாய் நானெழுதும்
ஓலைக்கிறுக்காச்சுதே - கிளியே
உள்ளமும் கிறுக்காச்சுதே
மாடுமனை போனாலென்ன
மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச் செம்பொன் போனாலென்ன - கிளியே
குரு நகை போதுமடி
எங்கும் நிறைந்திருப்போன்
எட்டியும் எட்டாதிருப்போன்
குங்கும வர்ணனடி - கிளியே
குமரப் பெருமானடி