This page uses Unicode Font

D K பட்டம்மாள்

 

கண்ணிகள்

 

தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு

தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே


நாதன் முடி மேலிருந்த வெண்ணிலாவே - அங்கே

நானும் வர வேண்டுகிறேன் வெண்ணிலாவே

சச்சிதானந் தக்கடலில் வெண்ணிலாவே - நானும்

கண்டின்புற வேண்டுகிறேன் வெண்ணிலாவே


ராப்பக லில்லாவிடத்தே வெண்ணிலாவே - நானும்

இருக்கை யின்றி வாடுகிறேன் வெண்ணிலாவே

வேற்றுநிற மாய்நிறைந்த வெண்ணிலாவே - நானும்

சிவமயம்தாய் நிறைந்தேன் வெண்ணிலேவே

போதர் முடி மீதிருந்த வெண்ணிலாவே

போதம் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே


ஆருமறி யாமலிங்கே வெண்ணிலாவே - அருள்

அருளாளன் வருவாரோ சொல்வாய் வெண்ணிலாவே


அந்தரங்க சேவை செய்ய வெண்ணிலாவே - எங்கள்

அண்ணல் வருவாரோ சொல்லாய் வெண்ணிலாவே

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page
Return to Top