யாழ்ப்பாணத்து யோக சுவாமிகள்
-சில குறிப்புகள்-
மாவிட்டபுரம் சி. குமாரபாரதி
(நியூ சீலாந்து)
செட்டாக சீராக வாழ்ந்து இன்று மிகவும் குழம்பிய நிலையில் இருப்பது எமது ஈழத்துச்
சமுதாயம். இந்த மாற்றங்களுக்கூடாக வாழ்ந்தவன் என்ற முறையில் எமது வாழ்வு முறைகளை
திரும்பிப் பார்க்கும் போது எமது நிறைகளைவிட எமது குறைகளையே அதிகம் காணும் போக்கு
என்னில் இன்று விரவியிருக்கிறது. எனது இந்த இரண்டும் கெட்டான் நிலையை நியாயப்
படுத்த காரணம் தேடி இந் நிலையை நிரந்தரப் படுத்த விரும்பவில்லை. இந்த எனது அக
நிலைப்பாட்டை முதலில் கூறிக் கொள்வதால் இச் சமுதாயத்தின் எதிர் காலம் பற்றிய எனது
நம்பிக்கைகள் பயங்கள் என இரண்டையுமே முன்நிலைப் படுத்துகிறேன். ஏனெனில் விஷயங்களை
ஓகோ என இலட்சியப் படுத்துவதில் செலுத்தும் கரிசனத்தைவிட உண்மையை ஏற்றுக் கொள்ளுதல,
சரியான சுயபார்வை என்பவை முக்கியமானவை எனக் கருதுகிறேன். சமுதாய நிலையை நாம்
உணருவதே எதிர்காலத்திற்கு ஒரேயொரு உத்தரவாதம். சமகாலத்தில் வாழும் ஒரு ஈழத் தமிழன்
மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது இன்றைய திகதியில் எங்கள் கருத்துக்களுக்குத்
தேவைக்கதிகமான அழுத்தமோ அன்றி அலட்சியமோ மற்றவர்களில் ஏற்பட்டுவிடாமல் இருக்க ஒரு
பீடிகை தேவைப் படுகிறது.
ஈழத்துப் பெரியவர்கள் வரிசையில் பலரைக் கூறமுடியும். ஆனாலும் எல்லாப்
பிரச்சனைக்களுக்கும் முலகாரணம் எங்கள் மனத்தின் தன்மைகள் உணர்ச்சி உந்தல்கள்
எங்களையறியாமலே தன்னாற்றலாகச் செயல்ப் படுவதுதான். தன்னையறிந்தால் தனக்கொரு
கேடில்லை, தன்னை யறியாமல் தானே கெடுகிறான், தன்னை யறியும் அறிவையறிந்த பின் தன்னையே
தானிருந தர்ச்சிக்கிறானே. இந்த வகையில் ஈழத்து ஞானி யோகரைப் பற்றிக் கொஞ்சம்
கூறுகிறேன்.
யாழ்பாணத்தில் ஒரு சித்தரகளின் ஞான பரம்பரை இருந்திருக்கிறது.
சித்தானைக்குட்டிச்சாமி, கடையிற்சாமி, செல்லப்பா சாமி, யோக சுவாமி ஆகிய நால்வரும்
வாழையடி வாழையாக வந்த மரபினர். இவர்கள் ஈழச் சமுதாயத்தின் பண்பாட்டிற்கு வளமுட்டிய
ஆழமான நீருற்றாக இருந்தவர்கள். சித்தர்கள் என்றவுடன் காயசித்தி, நீரின் மேல்
நடப்பது ரசவாதம் எனப் பல நு¡தனமான எண்ணங்கள் வாசகர்கள் மனதில் ஏற்படலாம். இந்த
ரீதியில் நான் கூறவில்லை.
ஆன்மீக நீருற்க்களாக உலகில் விளங்கிய பல மார்க்கங்கள் உண்டு. சித்தர்கள் நெறி, தாவு
(Tao)மார்க்கம், ஆழ்வார்கள் நெறி, சென் (Zen), சூபி (Sufi) மார்க்கம், இவை யாவும்
சம்பிரதாய சமய அமைப்புகளுக்கு வெளியே நின்று ஆனாலும் சமுதாயத்துடனும்
மததாபனங்களுடனும் நேரடியாகப் பொருதாது தாங்கள் கண்ட உண்மை நிலையில் வாழ்ந்த
ஞானிகளளின் மரபுகள். இப்படியான ஞானிகள் ஏற்கனவே தாபிக்கப் பட்ட சமய
நம்பிக்கைகளுக்கு ஒரு வகையில் அறைகூவலாகவும் அதே சமயம் அடிப்படையில் ஒழுக்கம் நற்
சிந்தனை ஆகியவற்றிக்கு மேலும் அழுத்தம் கொடுப்பவர்களாகவே காணப் பட்டார்கள்.
இருந்தாலும் சமுக சம்பிரதாயங்களுக்கு பயந்தோ, கடவுளுக்கு பயந்தோ நடப்பதை விட
தன்னைத் தானே உணர்ந்த அச்சமில்லாத இயல்பான துணிவுடன் வாழ்க்கையை அணுகுவதை இவர்கள்
பல வகையிலும் வலியுறுத்தனார்கள் என்பதே இவர்களுக்கும் சம்பிரதாய மதங்களுக்கும் உள்ள
வேறுபாடு எனப் படுகிறது. சம்பிரதாய மதங்களோ எப்பொழுதோ சொல்லப் பட்டதை - அது
கடவுளானாலும் சரி - கொள்கை ரீதியில் விடாப்பிடியாக பிடிதத்துக் கொண்டிருந்தனர். ஆக
நான் கூறும் ஞானமரபினரின் சொற்கள் கடவுட் கொள்கைகள் எனபவை அந்தந்த மட்டத்தில்
சம்பிராய சமய நம்பிக்கைகளுக்கும் பல ஒருமைப் பாடு இருக்கிறது என்பதைக் குறிப்பிட
வேண்டும். ஆனாலும் ஞானிகளுக்கு மட்டுமே நேரடி அனுபூதியுணர்வவின் விளைவாக ஆன்மீகத்தை
ஓங்கி நிலைநிறுத்தவும் மக்களுக்கு தமது நடத்தைகள் தியான நிலை முலம் நல்ல பலனை
உண்டாக்கவும் முடிகிறது.இதெல்லாம் ஒன்றையொன்று மேவி நடக்கும் விஷயங்கள்.
complimentary.
இந்தப் பலாபலன்களைச் சாதகமாக்கி மக்களை ஒரு மேலாண்மைக்குள் அடக்குவதை இவர்கள்
தவிர்திருக்கிறார்கள். இத்துடன் இன்னொரு விடயமும் குறிப்பட வேண்டும். சமய தாபனங்கள்
சில தத்துவங்கள் வாழ்க்கை முறைகளை தொடர்ச்சி விட்டுப் போகாமல் மனித மேம்பாட்டுக்காக
கொண்டு செல்வதற்கு தேவைப் படுகிறது. உதாரணமாக யோகரின் பாரம்பரியத்தை கொண்டு செல்ல
அன்பர்கள் சிவதொண்டன் நிலையம் என்று நடத்துகிறார்கள்.
நான் குறிப்பிடும் ஞான மார்க்கங்கள் எப்பொழுதுமே மக்கள் மட்டத்தில் வாழந்து அவர்கள்
மொழியிலேயே பேசினார்கள். இவர்களின் போதனைகளையும் வித்தியாசமுறும் சொற்களையும்
நடத்தைகளையும் கால தேச கலாச்சார வித்தியாசங்கள் என்ற மேலோட்டமான விஷயங்களின் விளைவு
என்பதை கரிசனமுள்ளவர்கள் கண்டு கொள்ளலாம். இவற்றிற்கான தேய்மானங்களை
கணக்கிலெடுத்துக் கொண்டால் அடிப்படையில் அவர்களுக்குள் மிகுந்த ஒற்றுமை நிலவுவதை
எளிதில் கண்டு கொள்ள முடியும். யோகசுவாமிகளைப் பற்றி கூறும் பொழுது எல்லா
ஞானிகளுக்கும் பொருந்தும் விஷயங்களைத்தான் குறிப்பிட வேண்டியுள்ளது. எங்களைப் பற்றி
நாங்கள் நினைப்பது போலன்றி ஞானிகள் ஒரு உடம்பு ஒரு கலாச்சாரம் ஒரு காலம் ஆகிய
வெளித் தோற்றங்களை கடந்தவர்கள் என்பது சரியான ஒரு ஐதீகமே. இவர்களுக்கு நிலைத்த
பெயர்களகூட ஒரு அடையாளமாக மற்றவர்களின் நடை முறை வசதிக்காக ஏற்படடவைதான். யோகரின்
இயற் பெயர் சதாசிவம்.
யோகசுவாமி 1872 ம் ஆண்டு மாவிட்டபுரத்திலுள்ள ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில்
பிறந்தார். சிறு வயதிலேயே படிப்பில் கெட்டிக்காராக இருந்ததுடன் உயரமான மாமரக்
கொப்புகளில் தனிமையில் இருப்பது பொழுது போக்கு என்பதை விட வேறு நு¡தனங்கள்
கிடையாது. பின்னர் நீர்பாசனத் திணைக் களத்தில் களஞ்சியக் காப்பாளராக அரசாங்க
உத்தியோகத்தில் சேர்ந்து கிளிநொச்சியில் பணிபுரிந்தார்.
1904 ம் ஆண்டு நல்லு¡ர் தேரடியில் செல்லப்பா சுவாமியை கண்டதிலிருந்து இவர் வாழ்க்கை
திசைமாறியது. இவரை கண்டவுடனேயே செல்லப்பாசுவாமி சிங்க கர்சனையாக "டேய்! நீ யார்?"
என உலுக்கி "ஒரு பொல்லாப்பும் இல்லை!" என உறுமினார். செல்லப்பாசுவாமியின் குரலிலும்
பார்வை கூர்மையிலும் கட்டுப்பட்ட சதாசிவம் அக் கணமே வேலையை உதறிவிட்டு சாமியை
சுற்றத் தொடங்கினார். செல்லப்பா சுவாமி மிகுந்த கண்டிப்பானவர் போதனை முறைகள்
புதுமையானவை. ஒரு முறை யோகரையும் வேறொருவரையும் தேரடியில் இருத்தி விட்டடு தேரைக்
காட்டி "தேரடா" ( உன்னை அறிந்து கொள்) என உறுமி விட்டு ஊர் சுற்றக்
கிளம்பிவிட்டார். சுவாமி திரும்பி வந்து பார்த்த பொழுது யோகர்மட்டும் இன்னமும்
தியானத்தில் நிலைப் பட்டு அதேயிடத்தைவிட்டு அசையாமலிருந்தாராம். 40 நாட்கள்
இப்படியிருந்தார் என்று கூறுவார்கள். தன்நிகரில்லாத சித்தர் செல்லப்பா ஊரிலும்
மரியாதை குறையாமலே விசர் செல்லப்பா என்றுகூட அழைக்கப் பட்டார். இவரைச் சுற்றி
ஆன்மீக நாட்டம் கொண்டவர்களும் சாதாரண மக்களும் இயல்பாகக் கூடிப் பிரிந்தார்கள்.
இவரின் வெளி தோற்றத்திற்கும் இவரின் குழந்தைத் தன்மைக்கும் காருண்யத்திற்கும்
சித்திகளுக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு என்பதை ஆர்வமுள்ள மக்கள் சுலபமாக
அடையாளம் கண்டு கொண்டார்கள். ஒரு முறை சாமியை கும்பிட விருப்புடையவர் ஒருவர்
சுவாமியை து¡ணுடன் கயிற்றால் கட்டிவிட்டு கும்பிட்டுவிட்டு அவிழ்த்து விட்டார்
என்றும் கதையுண்டு. செல்லப்பா சுவாமி பரிவாரங்களுடன் உற்சாகமாக பேசியபடியே
மட்டுவில் கத்தரிக்காய் கறி இண்டைக்கு வைக்க வேணும் வாருங்கோடா என்று சந்தைக்குப்
போயிருக்கிறார். சாமியை தெரியாதவர்கள் யாழ்பாணத்தில் இல்லை. வியாபாரி பெண்களும்
விழுந்தடித்து திறம் கத்தரிக்காயகளை பொறுக்கிக் கொடுத்திருக்கிறார்கள். பைம்பலாக
பேசியபடியே கறி சமைத்து பரிவாரங்களை சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறார். கத்தரிக்காய்
கறிகள் பரிமாறும் போது ஆவேசத்துடன் வந்து "உங்களுக்கு இப்ப மட்டுவில் கத்தரிக்காய
கறி கேக்குதோ" என கறியை து¡க்கி வீசினாராம். "பேசாமல் கிடக்கிறதை தின்னுங்கோடா"
என்று ஒரு உபதேசம். மிகவும் கவர்ச்சிகரமான விடுதலை விரும்பும் மனிதர் ஆனால் மடம்
என்றோ மாணவர் என்றோ செல்லாசுவாமி ஒரு கூட்த்தையும் நிரந்தரமாக செல்லப்பா சுவாமி
அடுக்கவில்லை.
யோகருக்கு ஞானம் கிட்டிய பின்பு இனித்தான் கற்பிப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை
தெரிந்த சாமி "ஒரு கொட்டாரத்திலை இரண்டு யானை கட்டி பராமரிக்க முடியாது" என்று கூறி
விட்டார். நீ உன் வழி போ என்பதாக அர்த்தம். குரு தீட்சை பெற்று சாமியின் மிதியடிகளை
வாங்கி கொண்டு அவரின் ஆசீர்வாதத்துடன் கொழும்புத்துறைக்கு போயிருக்கிறார். அங்கு
ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்திருப்பது வழமை. ஆனால் யோகருக்கும் குருவைப் போன்று
ஊர் சுற்றுவது பிடித்த காரியம். யோகர் கால் படாத தெருவே யாழ்ப்பாணத்தில் இல்லை
எனலாம். வேட்டி சண்டிக்கட்டு தோளில் ஒரு துண்டு எங்கும் நடைதான். குருவைப் போலவே
யாழ்ப்பாணத்தில் குழந்தைகள் கூட அடையாளம் காட்டும் பெரியவர். செல்லப்பா சாமி 1911
மறைந்தார். அதன் பிறகு சாமியின் பரிவாரங்கள் யோகரையே நாடினார்கள்.
கொழும்புத்துறையில் இவருடைய ஆதரவாளர்கள் சிறு குடில் அமைத்துக் கொடுத்தார்கள்.
பின்னர் அவ்விடத்திலேயே இருப்பு.
யோகர் சுவாமியின் முக்கிய பல நடத்தைகள் எல்லோர் கவனத்துக்கும் வந்து யாழ்பாணத்தின்
ஒரு ஐதீகமாகியது. இவரது ஆதரவாளர்களில் யாருக்காவது கடும் சுகவீனம் வந்தால் மரண
தறுவாயிலிருந்தால் சொல்லாமலேயே வந்து சேர்வது சாதாரண நிகழ்ச்சி. நான் யோகரின்
நேரடிப் பாதிப்புக்கு ஆளாகவில்லை என்பதைப் பற்றி பின்னால் கவலைப் பட்டிருக்கிறேன்.
அப்படி ஒரு ஆர்வம் ஏற்படாமல் போய் விட்டது. சந்தர்ப்பம் இருந்தது. ஆனால்
பாட்டனாரின் நண்பர். இந்த குரு என்ற விஷயம் பின்னால்தான் ஏற்பட்டது. சேல்லப்பா யோக
சாமிகளை பற்றி யாழ்பாணச் சூழலில் குறிப்பிடும் பொழுது பரிவாரம் ஆதரவாளர்கள்
நண்பர்கள் என்றே சொல்வது திருத்தமானது என நினைக்கிறேன். ஒரு முறை தாயாருக்கு
கடுமையான சுகவீனம். ஆஸபத்திரிக்கு வண்டியில் கொண்டு செல்கிறோம். சரியாக
ஆஸபத்திரிக்கு முன்வரும் மதவடியில் யோகர் சுவாமி காரை கை காட்டி நிறுத்துகிறார்.
சாயந்திர வேளை என்பதாக ஞாபகம். வண்டிக்கு அண்மையில் வந்து திருநீறு கொடுத்துவிட்டு
தகப்பனாருக்கு பயப்பட வேண்டாம் சரியாகப் போய்விடும் என்ற மாதிரி சொல்லி விட்டு காரை
கொண்டு போகும் படி சைகை காட்டுகிறார். அவரை எங்காவது கொண்டு விட வேணுமா? என்பதற்கு
மிடுக்காக சமிக்ஞையால் உதறிவிட்டு நடையைக் கட்டுகிறார்.
பெற்றோருக்கு மிகுந்த நம்பிக்கை உற்சாகம் ஏற்பட்டது. எனக்கு ஒரு பத்து வயது
இருக்கலாம். கோவில் திருவிழா நாட்களில் யோக சாமி உதாலை இப்பதான் போறார் என்று கதை
வரும். பார்த்தால் கூட்டத்துள்ளும் காற்றைப் போல் ஆனால் அவசரம் என்றில்லாமல்
நிதானமாக போய் வெளி வீதியில் நின்று கும்பிட்டு விட்டு தன் வழியே போய் விடுவார்.
இவரது இயக்கம் பற்றி சொல்வதானால் காற்றைப் போன்றது - யா¡தும் சுவடு படாமல் -
என்பதற்கு உதாரணம்.Moves without leaving a trace. எப்படி வந்தார் எப்படி போகிறார்
என்ற கேள்விகளுக்கு "உனக்கேன் அது? ஒரு பூராயமும் இல்லை". வற்புறுத்தினால் வசை
விழும்.
இன்னொரு பண்பு அந்நியர்கள் முன்பின் அறிமுகமாகாதவர்களின் பெயர்களை சொல்லி
விளிப்பது. முதன் முதலாக பாட்டனாரை சந்திக்கும் பொழுது டேய் சோமசுந்தரம் உன்ரை
தலையும் என்ரை தலையும் ஒண்டெடா. கீரைக் கறி நல்லாயிருந்தது என்றாராம். வீட்டில்
கீரைக் கறி ஆக்கியதையும் சொல்லியிருக்கிறார். யாழ்பாணத்திற்கு வெளியே இவருடைய பொயர்
மிக நிதானத்துடனேயே பரவியாதகத் தெரிகிறது. ஒரு முறை இலங்கையின் மிகப் புகழ் பெற்ற
அறுவை மருத்துவர் டாக்டர் அந்தனீஸ யாழ்பாணம் பெரியாஸபத்திரிக்கு வந்திருக்கிறார்.
அங்குள்ள டாக்டார்களிடம் யோகசுவாமியைப் பற்ற கேட்டிருக்கிறார். இவர்களும் "அந்தச்
சாத்திரியாரா? கொழும்புத்துறையில் ஒரு குடிசையில் இருப்பார்" என
வழிகாட்டியிருக்கிறார்கள். யோகரை பார்த்து வந்த பின்பு தனது சகாக்களைச்
சாடியிருக்கிறார். "பிரபஞ்சத்துடன் நேரடி ஊடகத்தெடர்பு கொண்ட ஒரு சக்தி உங்களுக்கு
மத்தியில் இருந்தும் சாத்திரியார் என்று சொல்கிறீர்களே" என வருத்தப்
பட்டிருக்கிறார். இவர் ஒரு சிங்கள கிருத்தவர் யோகரின் பரம விசிறியாவார். ஒரு முறை
ஒரு பண்டிதர் (பெயர் தெரியவில்லை) கொழும்பிலிருந்து யாழ்பாணம் புகையிரதத்தில்
சென்றிருக்கிறார். திரும்த் திரும்ப பண்டிதர் "யாரோ ஒரு ¦ரிய மகான் புகையிரதத்தில்
பயணிக்கிறார்" என்று தொண தொணத்த படியிருந்திருக்கிறார். புகையிரத நிலையத்தில் யோகர்
இறங்கிச் செல்வதைக் கண்டவுடன் "அதோ அவர்தான் அவர்தான்" என்று
குதித்தோடியிருக்கிறார் பண்டிதர். ஈதுவும் அவரின் கவர்ச்சியான தனி இயல்பு.
யோகருக்கு அருகாமையில் காரணமில்லாத சுகம் கவிந்திருப்பதைப் பலரும் கூற
கேட்டிருக்கிறேன். ஒரு முறை தமிழ்நாட்டிலிருந்து
தா.பா.மீனாட்சிசுந்தரமாகவிருக்கலாம் இவரது நிலையத்திற்கு போயிருக்கிறார். வாசலில்
யோகர் ஏதோ மராமத்துக் காரியம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அவரிடம் போய் நான்
யோகசுவாமியை பார்க்க வேண்டும் என கேட்டிருக்கிறார். "வாருங்கள்" என்று யோகர்
உள்ளுக்கு அழைத்துச் சென்று அமர வைத்துவிட்டு அவர் முன் சப்பணம் கொட்டியமர்ந்த
யோகர் "நான்தான் யோகன் என்ன வேணும் மீனாட்சிசுந்தரம்" என்று வினவினாராம்.
கார் சாதாரணமாக பாவனைக்கு வந்தபின் பல அன்பர்கள் அவரை இலங்கை முழுவதும் அழைத்துச்
செல்வார்கள். ஒரு முறை கண்டி பேராதனைப் பூங்காவுக்கு அழைத்துக் கொண்டு
சென்றிருக்கிறார். அப்போ பேராதனை பல்கலைக் கழகம் ஆரம்பிப்பது பற்றி யாரும் கனவு
கண்டதில்லை. வெறும் மேடு பள்ளம். அவ்விடத்தில் சிறுநீர் கழிக்க யோகர் காரை
நிறுத்தச் சொன்னாராம். பின்பு ஏறும் பொழுது சொன்னாராம் இவடத்திலை ஒரு பெரிய கல்வி
நிலையம் வரப் போகுது என்பதாக. யோகசுவாமிக்கு நிறையவே முஸலீம், கிருஸ்தவ, சிங்கள
அன்பர்கள் இருந்தார்கள்.இலங்கையின் கடைசி வெள்ளைக்கார தேசாதிபதி சோல்பரிப்
பிரபுவின் மகன் இவருடைய சீடர். இவரைப் போலவே வேட்டி துண்டுடன் யாழ்பாணக்
கோவில்களில் சஞ்சரித்தவர். இது ஹப்பி யுகம் ஆரம்பிக்க முந்தைய காலத்தில் நடந்தது.
இன்று ஹவாய் ஆதீனம் சுப்பிரமுனியசுவாமி என்ற ஒரு அமெரிக்கரால் நடாத்தப் படுகிறது.
தான் யோகரின் சீடர் என்றே குறிப்பிடுகிறார்.எல்லா மதத்தினருமே இவரது மறைவுக்
கூட்டங்களில் பங்கு பற்றினார்கள். பல மருத்துவர்கள் அரசாங்க உத்தியோகத்தவர் பாடசாலை
அதிபர்கள் ஆகியோருக்கு ஆதர்சமாக விளங்கினார். இதனால் 1911 ம் ஆண்டு தொடக்கம் 1964
வரை இவர் மிக இயல்பாக ஈழத்தில் தார்மீக பரிபாலனம் செய்ய முடிந்தது.
நிறைய வார்த்தைகளை அழகாகப் பேசுவது ஆன்மீகமாகாது. அதற்காக சித்தர்களின் வாக்குகளில்
கவிதை மிளிராது என்பதாகாது. வார்த்தைகளையும் மீறி மனிதனின் மனத்தை நேரடியாக
அவனுக்கே அறியாத ஆழத்தில் தொடக் கூடியவர்கள். இவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை
விடவும் இவர்கள் வாழ்வதினால் சமுதாயத்தில் ஏற்படும் நீண்ட கால நன்மைகள்
முக்கியமானவை என்பது என் கருத்து.சமுதாயத்தின் மனவோட்டங்களிலுள்ள சில ஆழமான தடைகள்
இயல்பாக சுத்திகரிக்கப் படுகிறது என்தாக வைத்துக் கொள்கிறேன்.
வாழ்க்கை நிகழ்வுகள் பல தவிர்க்க முடியாதவையாக அமைந்து விடலாம். ஆனால் அத்தகைய
பாரது¡ரமான நிகழ்வுகளின் பாதிப்பு எப்படியமையும் அமைய வேண்டும் என்பதைப் பற்றியே
யோகர் அக்கறை கொண்டிருந்தார். நிகழ்வுகளின் பாதிப்புகள் நாம் அவற்றை உள் வாங்கும்
முறையிலேயே தங்கியிருக்கிறது என்பது பலரும் ஒத்துக் கொள்ளக் கூடியதே. உண்மையான
துணிச்சல் இங்குதான் தேவைப் படுகிறது. நிகழ்வுகளை மாற்றுவதற்கு நாம் மன்றாடுவதைவிட
நிகழ்வுகளை எம்மைப் பாதிக்கும் முறையில- அவற்றை நாம் எதிர் கொள்ளும் முறையில
மாற்றம் ஏற்படுத்துவதே ஆன்மீகம். யோகர் தன்னிடம் பிரச்சனைகளுடன் வருபவர்களுக்குத்
திரும்பத்திரும்பக் கூறுவது எப்பவோ முடிந்த காரியம, சும்மா இரு, முற்றும் உண்மை,
தானே நான், சுத்திச் சுத்திச் சுப்பற்றை கொல்லைக்குள். பின்னால் அவரின் பரிவாரங்கள்
இவற்றை மகா வாக்கியம் என்று வகைப் படுத்தினர். நான் முன்னர் கூறியது போல, இவை அவர்
எதிரிலிருந்து ஆற்றாமையுடன் வந்தவர்களை பக்குவப் படுத்தும் சொற்கள். இவற்றிற்குரிய
வியாக்கயானங்கள் நிறைய உண்டு. உண்மை என்பதில் இரண்டு நிலை உள்ளது எனக்
கொள்ளுவோமா.பூரணமான நிலை (absolute truth),சார்பு நிலை (relative truth).
அப்படியாயின் யோகர் முன் அமர்ந்து கேட்டல் நேரடியாக சில மன அடைப்புகளை திறந்து
விடும் என்பது கேட்பவரின் சார்பியல் (realtive) நிலை. யோகசுவாமி அதைச் சொல்லும்
பொழுது அவரின் ஆழ் மனநிலை இது முழுமையானது சார்பற்ற உண்மை(absolute). இவற்றை
சொற்கள் ஒரு சமயதத்துவம் என்றாகும் பொழுது நீதி போதனை(commandment) என்ற நிலைக்கு
வருகிறது.எல்லா நிலைகளுக்கும் தேவையிருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.ஆனால்
வியாக்கியானம் என்று வரும் பொழுது ஒரு உள்ளுணர்வுடன் intutively பிடித்துக்
கொள்ளுதலும் ஒரு கலை.கவிதைக்கு உரையின்றி உயிர்நாடியை பிடிப்பதுதான் மேலான ரசனை
என்பது போல. உள்மனம் பற்றய பல விஷயங்களும் இப்படியே. இந்த மாதிரி சமயதத்துவங்களில்
உள்ளவற்றை உணர்வது எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தும் என்பது எனது எண்ணம்.
யோகசுவாமியின் பாதிப்பு இருந்த யாழ்பாணம் இன்று இருக்கும் நிலைக்கு எப்படி வந்தது,
வர முடியும் என்ற கேள்விக்கு நான் பதில் கூற முடியாமல் உள்ளேன். இதைக் கேள்வி
நிலையில் இப்போதைக்கு விடுவோம்.
நான் எழுதிய முதல் ஆன்மீகக் கட்டுரை. சமய நம்பிக்கையுள்ள அமீரக நண்பர்களுக்கு
எழுதுவதில் தயக்கம் இருக்கவில்லை என்பதுடன் ஊக்கமாகவும் இருந்தது.
நாளாந்தம் ஜீவ மரணப் போரட்டத்தில் இருக்கும் மக்களைப் பற்றி யோசிக்கும் பொழுது
பெரிய மனச் சுமை ஏற்படுவது இயல்பு. ஒரு நரக லோகத்தில் அவர்கள் இருப்பதாக
அந்தரம்.மெளலானா ஜலால்லுதீன் று¡மி என்ற சூபி ஞானியின் சில வரிகளை மெதுவாக மனத்தில்
ஓட்ட சில தெளிவுகள் ஏற்பட்டன. அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றவர்களுக்கும்
நம்பிக்கையூட்ட வல்லது.
" The inhabitants of Hell will be happier in Hell than they were in the world,
for in the world they had no idea of god, whereas in Hell they will think of
Him- and nothing can be sweeter than the knowledge of God "- Rumi