This page uses Unicode Font

வண்டி
 

இரண்டு மர சில்லு வண்டி என்ன வண்டி

ஹே ஹே என்று செலுத்துவாரே மாட்டு வண்டி

இரண்டு ரப்பர் சில்லு வண்டி என்ன வண்டி

இருந்து நாமே மிதித்து செல்லும் சைக்கிள் வண்டி

நாலு ரப்பர் சில்லு வண்டி என்ன வண்டி

நல்ல வேகம் கொண்டு செல்லும் மோட்டார் வண்டி

பயணிகள் செல்லும் பெரிய வண்டி என்ன வண்டி

காடும் மலையும் காட்டி செல்லும் பஸ் வண்டி

ஆறு பத்து சில்லு வண்டி என்ன வண்டி

நூறு பேரை கொண்டு செல்லும் ரயில் வண்டி

நீரில் மேலே ஓடும் வண்டி என்ன வண்டி

நிலத்தில் ஓட மாட்டாத புகைக்கப்பலே

காற்றில் ஏறி செல்லும் வண்டி என்ன வண்டி

அதி விரைவாய் பறந்து போகும் விண்கலம் தானே
 

பாடலை மழலைகளின் குரலில் கேட்பதற்கு இங்கே சொடுக்குங்கள். பாடலைப் பாடிய மழலைகள்: பைரவி, நீரோ ஆகியோர்.

Home Page Kids Page Arumuga Navalar's home page Yogaswami's Page
Return to Top