சிவமயம்

யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள்

சைவநன்மணி நா. செல்லப்பா


அன்பர்களே

இன்று தொடங்கி பல மாதங்களுக்கு முன்பே சைவ நன்மணி செல்லப்பா அவர்கள் என்னிடம் கையெழுத்துப் பிரதியாகத் தந்த ஓர் கட்டளையை(monograph) மின்பதிப்பாக்கும் பணியில் இறங்கி யுள்ளேன். சில தினங்களுக்கு முன்பு திரு குமாரபாரதி(New Zealand) அவர்கள், ஈழத்து சைவ பாரிம்பரியத்தைப் பற்றி சிறிது விளக்குகையில், ஞான சித்தர்களாக மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து சிவத்தொண்டையே பெரிதும் போற்றிய செல்லப்பா, சிவயோக சுவாமிகள் போன்றாரைப் பற்றி சிறிது கூறியிருந்ததை அறிவீர்கள்.

அந்த பாரம்பரியம் இன்னும் இறந்து படாமல் காத்து வருபவர்களில் பலர் இன்னும் இருக்கின்றனர். அவர்களில் வித்துவான் க. நா. வேலன் , சைவ நன்மணி செல்லப்பா போன்றோர்கள் மிகவும் சிறப்புக்குரியவர்கள்.

அவர்கள் கைவண்ணத்தில் மிளிர்ந்த இக்கட்டளையை மின்பதிப்பாக்கி அன்பர்களுக்கும் ஓர் ஞான விருந்தாகப் படைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இது தொடர்பாக மேலும் விளக்கங்கள் பெற முயல்வோர், மெய்கண்டார் குழு வழியாக சைவ நன்மணியிடமிருந்தே நேரடியான விளக்கத்தைப் பெறலாம். தமது 82 ஆவது அகவையிலும் தளராது இன்னும் ஆழச் சிந்தித்தும் எழுதிக் கொண்டுந்தான் இருக்கிறார் இவ்வாசிரியர்.

அன்பன் கி.லோகநாதன்.

Dr K Loganathan

Email: subas@pc.jaring.my

If you want to know more about World Saivism ,visit:
http://ulagan.tripod.com;

For Dravidian Philosophy:
https://members.tripod.com/loga/tindex.htm;

For Agamic Psychology:
https://members.tripod.com/ulagank/agapsyindex.htm

For ArutkuRal and related matters :
http://arutkuraL.tripod.com

அணிந்துரை

ஞானிகள் அருளியவை எல்லாம் அனுபூதிச் செல்வங்கள் ஆகும். அனுபூதி என்பது ஆன்மா துரியாதீத அவத்தையில் பெற்ற மெய்ஞ்ஞான அனுபவமாகும். சீவ கரணங்கள் எல்லாம் சிவகரணங்களாகப் பெற்ற நிலையிலேயே அவை அருளப்பட்டன. எனவே சீவகரணங்கள் உடைய நாம் எத்துணை முயன்றாலும் அவற்றின் உண்மைப் பொருளை உணர முடியாது. உண்மைப் பொருளை உணர வேண்டுமாயின் நமது சீவ கரணங்கள் சிவகரணங்களாக மாறவேண்டும்.

இந்நிலையை ஆன்மா நூலறிவால் ஒருபோதும் பெற முடியாது. ஏனெனில் அது,

"கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

நோக்கரிய நோக்கு, நுணுக்கரிய நுண்ணுணர்வு"

வாசித்துக் காணவொணாதது. இதனையே இந்நூலாசிரியர், மனவாசகத்தினால் அறிய முடியாது எனக் கூறுகின்றார். மனவாசகங்கடந்த நிலையிலேயே மெய்யுணர்வுக் காட்சி புலப்படும்.

மனவாசகங் கடந்த நிலை என்பது ஆன்மாவானது விஞ்ஞான மயகோசம் எனப்படும் கஞ்சுக சரீரத்தில் நிலைபெறும் 35 கருவிகளில் பிராணனும் புருடனுமாகிய கருவி இரண்டும் தவிர்ந்த ஏனைய 33 கருவிகளும் நீங்கிய துரியாதீத அவத்தையில் ஆன்ம அறிவு விளங்கப்பெற்ற நிலையாகும். இதுவே மனதற்ற நிலை எனபடுவது. இந்நிலையில் அருளப்பட்டவையே அருள் நூல்களாகும். பொய்யா மொழிகளாகும்.

செல்லப்பா சுவாமிகள் அருளிய மகாவாக்கியங்கள் நான்கும் சிவயோகசுவாமிகளின் நற்சிந்தனையும் இந்நிலை நின்று அருளப்பட்டனவையே. சைவ நன்மணி செல்லப்பா அவர்கள் இந்த நான்கு மகாவாக்கியங்களுக்கும் விளக்கம் தர முயன்றுள்ளார். இம்மகாவாக்கியங்களை ஒவ்வொருவரும் "தம் தமது அறிவு அறிவகை" அறிந்து கொண்டிருக்கும் இந்நாளில், ஆசிரியர் தரும் விளக்கங்கள் மேன்மேலுஞ் சிந்திக்கத் தூண்டுகின்றன.

யோகசுவாமிகள் வாழையடி வாழை எனவந்த திருக்கூட்ட மரபினில் ஒருவர். இன்று வாழும் ஈழத்தவராகிய எமக்கு மாத்திரமல்ல, எல்லோருக்கும் தேவையான தத்துவத் தளத்தினை, சமய நெறியின் வாழ்க்கை முறையினை வழங்கி உள்ளார்கள்.

இராம கிருஷ்ணருக்கு ஒரு விவேகானந்தன்; செல்லப்பாவுக்கு ஒரு சிவயோக நாதன்.

செல்லப்பா சுவாமிகள் சிவயோகசுவாமிகளுக்கு அருளியவற்றை மற்றொரு செல்லப்பா விளக்கியது பொருத்தம்தானே!. எதையும் தனது தெளிவின் மதுகையால் துனித்துக் காணும் இயல்புடைய அவரது ஆய்வு கற்போர் உள்ளத்தைத் தூண்டி உண்மை காண ஊக்குவிக்கும் என நம்புகிறேன்.

பொய் சொல்லாதே!

உண்மையும் சொல்லாதே!
- யோகசுவாமி

"இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்" - திருவள்ளுவர்


வித்துவான் க.ந. வேலன்(கையொப்பம்)

இராமகிருஷ்ன மிஷன் வீதி

கொழும்பு 6

இலங்கை


யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள்

சைவநன்மணி நா. செல்லப்பா


1. எப்பவோ முடிந்த காரியம்
2. நாம் அறியோம்
3. ஒரு பொல்லாப்பும் இல்லை
4. முழுதும் உண்மை

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top