This page uses Unicode Font

ஈழத்துக் கோவில்கள் வரலாறு

முத்துமாரியம்மன், ஆவரம்பிட்டி, அராலி கிழக்கு

 

யாழ்ப்பாண மாவட்டத்திலே அராலிப் பாலத்திலிருந்து தெற்கு நோக்கிக் கால்மைல் தூரத்தில், மேற்கு நோக்கிய வீதியில் ஆவரம்பிட்டியில் அமைந்துள்ள அவ்வம்மன் மலையாள் தேசத்திலிருந்து வந்ததாக ஐதீகம். இக்கோவிலின் வடக்கு வீதியில் அமைந்துள்ள நாவல் மரம் மிகப் பழமை வாய்ந்தது. அடுத்த வெள்ளி, சனிக்கிழமைகளில் முடிவடையுமாறு உற்சவம் நடைபெறும். 9வது நாள் ஆடு கோழிகளைப் பலியிடும் வேள்வி இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்தது. பின் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒவ்வொரு வருடமும் புதிய கமுகு மரத்தின் உச்சியில் நடுவே சிங்கம் வரையப்பட்ட வெள்ளைச்சீலையும் , நான்கு நிறச்சேலைகளும் கட்டப்பட்டுத் திறந்த வெளி அரங்கில் கொடிமரம் ஏற்றப்படும். 8ம் நாள் சுவாமி வேட்டைக்குச் சென்று திரும்ப வைகறையாகிவிடும். அடுத்த நாள் பொங்கல் பூசைகள் நடைபெறும். இதற்குப் பின் சங்காபிஷேகமும் நடந்தேறும். அன்று பகல் அன்னதானம் வழங்கப்பட்டு மாலை பூந்தண்டிகையில் அம்பாள் வலம்வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

சீரணி ஸ்ரீ நாகபூஷணியம்மை, சண்டிலிப்பாய்

இலங்கையில் கண்ணகியம்மன் வழிபாடு
 

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top