உ
சிவமயம்
யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள்
சைவநன்மணி நா. செல்லப்பா
அன்பர்களே
இன்று தொடங்கி பல மாதங்களுக்கு முன்பே சைவ நன்மணி செல்லப்பா அவர்கள் என்னிடம்
கையெழுத்துப் பிரதியாகத் தந்த ஓர் கட்டளையை(monograph) மின்பதிப்பாக்கும் பணியில்
இறங்கி யுள்ளேன். சில தினங்களுக்கு முன்பு திரு குமாரபாரதி(New Zealand) அவர்கள்,
ஈழத்து சைவ பாரிம்பரியத்தைப் பற்றி சிறிது விளக்குகையில், ஞான சித்தர்களாக மிக
எளிமையான வாழ்க்கை வாழ்ந்து சிவத்தொண்டையே பெரிதும் போற்றிய செல்லப்பா, சிவயோக
சுவாமிகள் போன்றாரைப் பற்றி சிறிது கூறியிருந்ததை அறிவீர்கள்.
அந்த பாரம்பரியம் இன்னும் இறந்து படாமல் காத்து வருபவர்களில் பலர் இன்னும்
இருக்கின்றனர். அவர்களில் வித்துவான் க. நா. வேலன் , சைவ நன்மணி செல்லப்பா
போன்றோர்கள் மிகவும் சிறப்புக்குரியவர்கள்.
அவர்கள் கைவண்ணத்தில் மிளிர்ந்த இக்கட்டளையை மின்பதிப்பாக்கி அன்பர்களுக்கும் ஓர்
ஞான விருந்தாகப் படைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இது தொடர்பாக மேலும்
விளக்கங்கள் பெற முயல்வோர், மெய்கண்டார் குழு வழியாக சைவ நன்மணியிடமிருந்தே
நேரடியான விளக்கத்தைப் பெறலாம். தமது 82 ஆவது அகவையிலும் தளராது இன்னும் ஆழச்
சிந்தித்தும் எழுதிக் கொண்டுந்தான் இருக்கிறார் இவ்வாசிரியர்.
அன்பன் கி.லோகநாதன்.
Dr K Loganathan
Email: subas@pc.jaring.my
If you want to know more about World Saivism ,visit:
http://ulagan.tripod.com;
For Dravidian Philosophy:
https://members.tripod.com/loga/tindex.htm;
For Agamic Psychology:
https://members.tripod.com/ulagank/agapsyindex.htm
For ArutkuRal and related matters :
http://arutkuraL.tripod.com
யோகசுவாமிகளின் மகாவாக்கியப் பொருள்
சைவநன்மணி நா. செல்லப்பா
1.
எப்பவோ முடிந்த காரியம்
2.
நாம் அறியோம்
3.
ஒரு பொல்லாப்பும் இல்லை
4.
முழுதும் உண்மை