17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள்
 

பொருளடக்கம்:
 

  1. அகிலேசபிள்ளை வே. - V Akilesapillai (1853 - 1910)
  2. அகிலேஸ்வரசர்மா சி, மண்டைதீவு - S Akilesvarasarma 19-20ம் நூற்றாண்டு
  3. அப்துல் ரகுமான், நாவலப்பிட்டி - Navalappitti Abdul Rahuman (1846-1920)
  4. அப்பாச்சாமி ஐயர் கா, வசாவிளான்- K Appasamy Iyer 19ம் நூற்றாண்டு
  5. அப்பாத்துரைப்பிள்ளை, மு. நவாலி - Navaali M Appathuraipillai 19ம் நூற்றாண்டு
  6. அப்புக்குட்டி ஐயர் - Appukkuddi Iyer (1788 - 1863)
  7. அம்பலவாண பண்டிதர், யாழ்ப்பாணம் - Ambalavana Pandithar (1878)
  8. அம்பிகைபாகர் - Ambihaipahar (1884 -1904)
  9. அமிர்தலிங்கம்பிள்ளை, சி.தா. - C.T. Amirthalingampillai 19ம் நூற்றாண்டு
  10. அரசகேசரி - Arasakesari நல்லூர் 16- 17 ம் நூற்றாண்டு
  11. அருணாசலம்(ஆசையர்) - Arunasalam - அராலி
  12. அனந்தசுப்பையர், க - வண்ணார்பண்ணை - K Anandasuppaiyar 19ம் நூற்றாண்டு
  13. ஆறுமுக நாவலர் - Arumuga Navalar (1822- 1879)
  14. ஆறுமுகப்பிள்ளை, சி. உடுப்பிட்டி - C. Arumugapillai 19ம் நூற்றாண்டு
  15. ஆறுமுகம்பிள்ளை - Arumugampillai, வட்டுக்கோட்டை, 19ம் நூற்றாண்டு
  16. ஆறுமுகம் க. - K Arumugam 19ம் நூற்றாண்டு
  17. இராமலிங்க ஐயர், ச.(நல்லூர்) - Nallur S Ramalinga Ayer (1649 - )
  18. இராமலிங்கச் சட்டம்பியார், ப. (புங்குடுதீவு) 19ம் நூற்றாண்டு
  19. இராமலிங்கம், வ. (சுதுமலை) - Suthumalai V Ramalingam ( - 16.02.1885)
  20. இராமலிங்கம், வே. உடுப்பிட்டி- Uduppiddi V Ramalingam 19ம் நூற்றாண்டு
  21. இன்பகவி 19ம் நூற்றாண்டு
  22. ஏரம்பையர் - Erampaiyar (1847 - 1914)
  23. கணபதி ஐயர் Kanapathy Ayer 19ம் நூற்றாண்டு
  24. கதிரவேற்பிள்ளை, தம்பலகாமம் - Thampalakaamam Kathiravetpillai 19ம் நூற்றாண்டு
  25. கந்தப்ப சுவாமிகள், யாழ்ப்பாணம் - Kanthappa Swami
  26. கந்தப் பிள்ளை - Kanthapillai (1766 - 1842)
  27. கனகசபைப் புலவர், அளவெட்டி - Alaveddi Kanagasabai Pulavar (1825 - 1873)
  28. குமாரசாமிப் பிள்ளை, சுன்னாகம் - Chunnakam Kumarasamipillai (19-20ம் நூற்றாண்டு)
  29. குமாரசாமிப் புலவர், அ., சுன்னாகம் - Chunnakam A. Kumarasamy pulavar (1854 - 1922)
  30. குமாரசுவாமி முதலியார், உடுப்பிட்டி - Uduppiddi Kumaraswami Muthaliyar (1791 - 1874)
  31. கூழங்கைத் தம்பிரான் - Koolangkai Thampiran - (-1795)
  32. கைலாசபிள்ளை, திருச்சிற்றம்பலம் - T. Kailasapillai (19-20ம் நூற்றாண்டு)
  33. சபாபதி நாவலர் Sabapathy Navalar (1846 - 1903)
  34. சரவணமுத்தன் அ. - A Saravanamuththan (1890 - 1930)
  35. சிற்றம்பலப் புலவர் - Sittambalapulavar 18ம் நூற்றாண்டு
  36. சின்னத்தம்பிப் புலவர், இணுவில் - Inuvil Sinnathamby Pulavar 19ம் நூற்றாண்டு
  37. சின்னத்தம்பிப் புலவர், நல்லூர் - Nallur Sinnathamby Pulavar 18ம் நூற்றாண்டு
  38. சுப்பையர், யாழ்ப்பாணம் - Suppaiyar 18ம் நூற்றாண்டு
  39. செல்லையா பிள்ளை, மானிப்பாய் - Sellaiyah Pillai 19ம் நூற்றாண்டு
  40. சேனாதிராய முதலியார் - Senathiraya Muthaliyar (1750 - 1840)
  41. சோமசுந்தரப் புலவர் - Somasundara Pulavar (1878 - 1953)
  42. ஞானப்பிரகாச சுவாமிகள் - Gnanapirakasa Swamikal
  43. ஞானப்பிரகாச தேசிகர், யாழ்ப்பாணம் - Gnanapirakasa Thesikar 17ம் நூற்றாண்டு
  44. நாகேசையர், இ. வட்டுக்கோட்டை I. Nagesaiyer ( - 1862)
  45. தம்பிமுத்துப்பிள்ளை - Thampimuthupillai (19ம் நூற்றாண்டு)
  46. தாமோதரம் பிள்ளை, சி.வை. - C V Thamotharampillai (1832 - 1901)
  47. நாகமணிப் புலவர், வே. க. - V. K. Nagamani Pulavar (1900s)
  48. பூபாலபிள்ளை - Poobalapillai (1856 - 1921)
  49. பேதுறுப்புலவர், தெல்லிப்பழை - Pethuru Pulavar 18ம் நூற்றாண்டு
  50. பேரம்பலப்புலவர் - Perampala Pulavar (1859 - 1938)
  51. பொன்னம்பல பிள்ளை , மாவை - Ponnambala Pillai 19ம் நூற்றாண்டு
  52. மயில்வாகனப் புலவர், மாதகல் - Mayilvagana Pulavar (1779 - 1816)
  53. மாப்பாண முதலியார், எழுதுமட்டுவாள் - Mappana Muthaliyar 19ம் நூற்றாண்டு
  54. முருகேசப் பண்டிதர், சுன்னாகம் - Chunnakam Murukesa Pandithar 19ம் நூற்றாண்டு
  55. முத்துக்குமார சுவாமிகள் - Muthukumara Swamikal 19-20ம் நூற்றாண்டு
  56. வரதராச பண்டிதர், சுன்னாகம் - Chunnakam Varatharasa Pandithar - 18-19ம் நூற்றாண்டு
  57. மொட்டை வேலாப் போடியார் - Mottai Velaapodiyaar (1804 - 1880)
  58. விபுலாநந்தர் - Swami Vipulanandar (1892 - 1947)
  59. வேலுப்பிள்ளை க. வயாவிளான் - Kalladi Veluppillai (1860 - 1944)
  60. வேலுப்பிள்ளை, திருகோணமலை - Veluppillai 19ம் நூற்றாண்டு
  61. வேலுப்பிள்ளை, வட்டுக்கோட்டை Vaddukkoddai Veluppillai
  62. வேற்பிள்ளை, க. - K Vetpillai (1847 - 1930)
  63. வைத்தியநாத தம்பிரான், யாழ்ப்பாணம் - Vaithiyanatha Thampiran 17ம்நூற்றாண்டு
  64. வைத்தியலிங்க பிள்ளை, வண்ணார்பண்ணை - Vaithiyalingapillai 19ம் நூற்றாண்டு
  65. வைத்தியலிங்கம், க. வண்ணார்பண்ணை - K Vaithiyalingam 19-20ம் நூற்றாண்டு
  66. வைத்திலிங்கம் பிள்ளை, வல்வை - Vaithilingam Pillai (1843 - 1901)
 

அகிலேசபிள்ளை வே. - V Akilesapillai (1853 - 1910):

திருகோணமலை வேலுப்பிள்ளையின் புதல்வர். இராசக்கோன், அழகக்கோன் என்போரின் தந்தை. குமாரவேலுப்பிள்ளையிடமும் சிறிய தந்தை தையல்பாகம்பிள்ளையிடமும் தமிழ் இலக்கியலக்கணங்களைக் கற்றுத் தேறியவர். பயிற்றப் பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்தவர். திருகோணமலையிலே விசுவநாதசுவாமி கோயில், மடத்தடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் முகாமையாளராகச் சேவை புரிந்தவர்.
 
ஊசல் சித்தி விநாயகர் ஊஞ்சல்
சிவகாமியம்மன் ஊஞ்சல்
பத்திரகாளி ஊஞ்சல்
கலிவெண்பா கந்தசாமி கலிவெண்பா
கும்மி திரிகோணமலை சிவகாமியம்மன் கும்மி
பத்து சித்திர வேலாயுதசாமி தரிசனம்
மயிற்பத்து
வேற்பத்து
பதம் வில்லூன்றிக் கந்தசாமி பதம்
பதிகம் கந்தசாமி பதிகம்
மாலை நெஞ்சறிமாலை
விருத்தம் கந்தசாமி விருத்தம்
திரிகோணமலை விசாலாட்சியம்மன் விருத்தம்
விசுவநாதர் விருத்தம்
வெருகல் சித்திர வேலாயுதசாமி விருத்தம்
வைபவம் திருக்கோணாசல வைபவம்


அகிலேஸ்வரசர்மா சி, மண்டைதீவு - S Akilesvarasarma 19-20ம் நூற்றாண்டு:
 
அந்தாதி திருவெண்காட்டந்தாதி
ஊஞ்சல் திருவெண்காட்டு சித்தி விநாயகர் ஊஞ்சல்
கும்மி திருவெண்காட்டீசர் கும்மி
பண்ணைப்பாலக் கும்மி
பதிகம் முருகன் கீர்த்தனைப் பதிகம்
மதுரை மீனாட்சியம்மன் பதிகம்
பஞ்சரத்தினம் நடராஜபஞ்சரத்தினம்
கீர்த்தனை மதுரை மீனாட்சியம்மன் கீர்த்தனை


அப்துல் ரகுமான், நாவலப்பிட்டி - Navalappitti Abdul Rahuman (1846-1920):
 
கும்மி அகீதாக் கும்மி
மாலை சரந்தீவு மாலை
நாச்சியார் மாலை


அப்பாச்சாமி ஐயர் கா, வசாவிளான்- K Appasamy Iyer 19ம் நூற்றாண்டு:
 

புராணம் நகுலகிரி புராணம்


அப்பாத்துரைப்பிள்ளை, மு. நவாலி - Navaali M Appathuraipillai 19ம் நூற்றாண்டு:
 

யாழ்ப்பாணம் நவாலி முத்துத்தம்பியின் புதல்வர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர்.
 

மாலை சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை
மஞ்சரி நல்லைச் சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி(1894)
அந்தாதி மருதடியந்தாதி(1891)


அப்புக்குட்டி ஐயர் - Appukkuddi Iyer (1788 - 1863):

வாலசுப்பிரமணியஐயர் எனும் மறுநாமமுடையவர். நல்லூர் சிகிவாகனஐயரின் புதல்வர். நல்லூர் கந்தசுவாமி கோயில் அர்ச்சகர். யாழ்ப்பாணம் மாவட்ட நீதித்தலத்தில் புறக்டராக அநுமதி பெறவும் பதிவு செய்யவும் எட்வேட் பாண்ஸ் பிரபுவிடம் 1825இல் உத்தரவு பெற்றவர்.
 

பிள்ளைத்தமிழ் நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்
புராணம் சூதுபுராணம்


அம்பலவாண பண்டிதர் - யாழ்ப்பாணம் - Ambalavana Pandithar (1878)

கோப்பாய் அருளம்பல முதலியாரின் கனிஷ்ட புத்திரன். இருபாலைச் சேனாதிராய முதலியாரிடைய மாணாக்கருள் ஒருவர். பல தனிப்பாக்களைப் பாடியுள்ளார். சி.வை.தாமோதரம்பிள்ளை அம்பலவாண பண்டிதர் மீது பாடிய சமரகவி:

தெல்லி நகரந் திருவிழந்ததோதமிழ்மா

தில்லந் தனையின்றிழந்தாளோ- சொல்லரிய

வித்தார வாய்மை விறலம்பலவாணன்

செத்தானென்றாரோ சிவா


அம்பிகைபாகர் - Ambihaipahar (1884 -1904):
 

அந்தாதி இணுவை அந்தாதி


அமிர்தலிங்கம்பிள்ளை, சி.தா. - C.T. Amirthalingampillai 19ம் நூற்றாண்டு:

ராவ்பகதூர்
சி.வை. தாமோதரம்பிள்ளையின் புதல்வர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கற்றவர்.
 

பிள்ளைத்தமிழ் சாலை விநாயகர் பிள்ளைத் தமிழ்
மாலை தணிகேசர் மாலை (1881)


அரசகேசரி - நல்லூர் - Nallur - 16-17ம் நூற்றாண்டு

யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகர சக்கரவர்த்தியின் மருமகன்.தமிழ் மொழியிலும் சமஸ்கிருத்ததிலும் வல்லவர்.காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சம் என்னும் மகா காவியத்தை இவர் தமிழிற் புராண நடையாய்ப் பாடி இரகு வமிசம் என்னும் பெயர் சூட்டினார்.

காரைதீவு கா.சிவசிதம்பர ஐயர் 1887 ம் ஆண்டிலே சென்னையில் பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்று இடம்பெறுகின்றது.


அருணாசலம்(ஆசையர்)-அராலி - Arunasalam

சோதிடம் காரிகை என்னும் நூல்களில் முக்கிய பேரெடுத்தவர்.மாதகலைச் சேர்ந்த வித்துவ சிரோண்மணி சிற்றம்பலப் புலவருடைய மாணவர். சண்முகச் சட்டம்பியார்,முத்துக்குமாரு என்போர் இவரது மாணவர்கள்.பல தனிப்பாக்களைப் பாடியவர்.


அனந்தசுப்பையர், க - வண்ணார்பண்ணை - K Anandasuppaiyar 19ம் நூற்றாண்டு:

 

கலிவெண்பா வண்ணைநகர் தையல்நாயகி கலிவெண்பா
ஊஞ்சல் வண்ணைநகர் தையல்நாயகி திருவூஞ்சல்
ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி திருவூஞ்சல்


ஆறுமுக நாவலர் - Arumuga Navalar (1822- 1879):
 

தலபுராணம் தேவகோட்டைத் தலபுராணம்
பரிகாரம் சிவதூடணப் பரிகாரம்
போதம் சுப்பிரபோதம்
மான்மியம் சிதம்பர மான்மியம்
விதி திருவாசக பூசா விதி
விருத்தம் அராலிச் சித்தி விநாயகர் விருத்தம்
திருச்செந்தில் சந்த விருத்தம்


ஆறுமுகப்பிள்ளை, சி. உடுப்பிட்டி - C. Arumugapillai 19ம் நூற்றாண்டு:

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் உடுப்பிட்டி என்னுமூரில் வாழ்ந்தவர். அப்புக்குட்டி உபாத்தியாயர் என்றழைக்கப் பெற்றவர். வல்வை ச. வயித்தியலிங்க பிள்ளையிடம் தமிழ் இலக்கியலக்கணங் கற்றவர். வைமன் கதிரவெற்பிள்ளையின் அகராதி வேலையில் உதவியாக விளங்கியவர். அவர் தந்தையாரின் பாடல்களை "குமாரசாமி முதலியார் கவித்திரட்டு" என 1887ல் தொகுத்து வெளியிட்டவர். கிறித்துப்பலப்பிரிவினை, கிறிஸ்துசமய பேதம் (1889), விவிலியநூல் வரலாறு (1889) எனும் கண்டன நூல்களைக் கிறிஸ்தவருக்கு எதிராக எழுதியவர்.
 

பதிகம் நெற்கொலு வைரவர் பதிகம்

ஆறுமுகம்பிள்ளை - Arumugampillai, வட்டுக்கோட்டை 19ம் நூற்றாண்டு:
 

விதி ஆசௌச விதி


ஆறுமுகம் க. - K Arumugam 19ம் நூற்றாண்டு:
 

அந்தாதி திரிகோணமலை அந்தாதி


இராமலிங்க ஐயர், ச.(நல்லூர்) - Nallur S Ramalinga Ayer (1649 - ):

இராமலிங்க முனிவர் எனவும் அழைக்கப்பட்டவர். சந்திரசேகரஐயரின் புதல்வர். யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். அராலி மேற்கில் வசித்தவர். சகம் 1590க்குச் சமமான பிலவங்க வருடம் வைகாசி மாதம் (1667) ஈழத்தில் முதன் முதலாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துக் கரலிகிதமாய் வெளிப்படுத்தியவர். சந்தானதீபிகை எனும் சோதிட நூலை 1713இல் சங்கததிலிருந்து மொழிபெயர்த்துப் பாடியவர். அது புரசைப் பாக்கம் விவேக விளக்க அச்சுக்கூடத்தில் 1868இல் அச்சிடப்பெற்றது. அதனைச் சு. நடராசையர் பரிசோதித்துப் பொழிப்புரை செய்ய, ச. இ. சிவராமலிங்கையர் 1901ஆம், 1940ஆம் ஆண்டுகளில் இருமுறை பதிப்பித்தனர்.

இராமலிங்கச் சட்டம்பியார், ப. (புங்குடுதீவு) 19ம் நூற்றாண்டு:

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பரமானந்தரின் புதல்வர். சேதுநாதர் என்பவரிடம் கல்வி கற்றவர்.
 

பதிகம் புங்குடுதீவு கேரநகர் அரிகரபுத்திரர் பதிகம்
பாட்டு கப்பற்பாட்டு
புயற்பாட்டு


இராமலிங்கம், வ. (சுதுமலை) - Suthumalai V Ramalingam ( - 16.02.1885):

யாழ்ப்பாணம் சுதுமலை என்னுமூரினர். குலநீதிவல்ல மாப்பாண முதலியார் மரபினர். ஆனைக்கோட்டை கு. வயிரமுத்து உடையாரின் புதல்வர்.
 

அந்தாதி சுதுமலை சங்களை அம்மன் அந்தாதி
விலாசம் தமயந்தி விலாசம்
மாணிக்கவாசகர் விலாசம்

இராமலிங்கம், வே. உடுப்பிட்டி- Uduppiddi V Ramalingam 19ம் நூற்றாண்டு:<.a>
 

புராணம் கோட்டுப் புராணம்


இன்பகவி 19ம் நூற்றாண்டு:
 

குறவஞ்சி கச்சேரி முதலியார் குறவஞ்சி
முத்துக்கிருட்டினன் குறவஞ்சி
யாழ்ப்பாணத்துச் செல்வர் குறவஞ்சி


ஏரம்பையர் - Erampaiyar (1847 - 1914, மாதகல்):
 

ஊசல் கதிரேசர் ஊஞ்சல்
கவணாவத்தை வைரவர் ஊஞ்சல்
குவாலாலம்பூர் சிவபெருமான் ஊஞ்சல்
மாதகற் பிள்ளையார் ஊஞ்சல்
தோத்திரம் நாகேசுவரி தோத்திரம்
நீதி நீதிசாரம்
புராணம் நகுலாசல புராணம்
வினாவிடை ஆசௌச வினாவிடை (1912)
விதி சிரார்த்த விதி


கணபதி ஐயர் Kanapathy Ayer 19ம் நூற்றாண்டு:
 

பாட்டு கப்பற்பாட்டு
குறவஞ்சி வண்ணை வைத்தியலிங்க குறவஞ்சி
பதிகம் வட்டுநகர் பிட்டிவயல் பத்திரகாளிப் பதிகம்


கதிரவேற்பிள்ளை, தம்பலகாமம் - Thampalakaamam Kathiravetpillai 19ம் நூற்றாண்டு:
 

பதிகம் கோணேசர் பதிகம்


கந்தப்ப சுவாமிகள், யாழ்ப்பாணம் - Kanthappa Swami:
 

கலம்பகம் கதிர்காமக் கலம்பகம்


கந்தப் பிள்ளை - Kanthapillai (1766 - 1842):
 

குறவஞ்சி நல்லைநகர்க் குறவஞ்சி


கனகசபைப் புலவர், அளவெட்டி - Alaveddi Kanagasabai Pulavar (1825 - 1873):
 

புராணம் திருவாக்குப் புராணம்
மடல் அழகர்சாமி மடல்


குமாரசாமிப் பிள்ளை, சுன்னாகம் - Chunnakam Kumarasamipillai (19-20ம் நூற்றாண்டு):
 

ஊசல் துணவை அரசடியில் சண்முகர் ஊஞ்சல்
எச்சரிக்கை துணவை அரசடியில் சண்முகர் எச்சரிக்கை


அ. குமாரசாமிப் புலவர், சுன்னாகம் - Chunnakam Kumarasami Pulavar (சனவரி 18, 1854 - மார்ச் 23, 1922):
 

ஊசல் வதுளைக் கதிரேசன் ஊஞ்சல் (1884)
துணைவை அரசடி விநாயகர் ஊஞ்சல் (1889)
கீரிமலை நகுலேசர் ஊஞ்சல் (1896)
ஏழாலை அத்தியடி விநாயகரூஞ்சல் (1897)
கைலாய பிள்ளையார் ஊஞ்சல் (1904)
கோப்பாய் வெள்ளெருவை விநாயகர் ஊஞ்சல் (1905)
விளிசிட்டி பொற்கலந்தம்பை பைரவர் ஊஞ்சல் (1912)
தெல்லிப்பழை தில்லையிட்டி அம்மன் ஊஞ்சல் (1915)
பன்னாலை வள்ளிமலை கந்தசுவாமி ஊஞ்சல் (1916)
அராலி முத்துமாரியம்மான் ஊஞ்சல் (1921)
சிந்து வதுளைக் கதிரேசன் சிந்து (1884)
மாலை மாவையிரட்டை மணிமாலை (1896)
கலிவெண்பா மாவைக் கலிவெண்பா (1895)
சதகம் நகுலேசர் சதகம் (1896)
அட்டகம் அத்தியடி விநாயகர் அட்டகம் (1897)
கும்மி மிலேச்சமதவிகற்பகக் கும்மி (1888)


குமாரசுவாமி முதலியார், உடுப்பிட்டி - Uduppiddi Kumaraswami Muthaliyar (1791 - டிசம்பர் 30, 1874):
 

இவர் ஊர்காவற்துறையைச் சேர்ந்த வைமன் கதிரவேற்பிள்ளையின் தகப்பனார். "இந்திர குமார நாடகம்" என்ற பெயரில் நாடகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
 

ஊசல் கந்தவனநாதர் ஊஞ்சல்
மூளாய்ச் சித்திவிநாயகர் ஊஞ்சல்
கலித்துறை நல்லைக் கலித்துறை
கோவை அருளம்பலக் கோவை
பதிகம் திருவிற் சுப்பிரமணியர் பதிகம்


கூழங்கைத் தம்பிரான் - Koolangkai Thampiran - (-1795):

இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சித்தாந்த சாஸ்திரங்களிலும் மிக்க பாண்டித்திய முடையவர். சிவபக்தியும் சிவானுபூதியும் உடையவர். யாழ்ப்பாணத்தில் 18ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர். இத்தம்பிரான் திருப்பனந்தாள் மடத்திலிருந்தபோது, அம்மடாதிபதி தம்முடைய கண்டிகை களவு போயினமை காரணமாகச் சந்தேகங் கொண்டு அவரைச் சத்தியம் செய்யுமாறு கேட்க, அவர் உருக்கிய நெய்யிலே கையிடச்சொன்னாலுஞ் செய்வேனென்று கூறி, அவ்வாறு கூசாது கையிட்டுத் தன் சத்தியத்தை நாட்டி அதனாற் கை கூழையாகப் பெற்றவர். இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சித்தாந்த சாத்திரங்களிலும் மிக்கபாண்டித்தியமுடையவர். சிவபக்த்தியும் சிவானுபூதியும் உடையவர்.
 

மாலை சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை
கலிவெண்பா நல்லைக் கலிவெண்பா
புராணம் தேவப்பிரசை திருக்கதை யோசேப்புப் புராணம்
வண்ணம் கூழங்கையர் வண்ணம்

கைலாசபிள்ளை, திருச்சிற்றம்பலம் - T. Kailasapillai (19-20ம் நூற்றாண்டு) :

இவர் "வெள்ளியந்திருமலைகிழார்" என்றும் அழைக்கப்பட்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர். இயற்பெயர் திருச்சிற்றம்பல கைலாசபிள்ளை. நல்லூர் வித்துவசிரோமணி மனப்புலி முதலியார் சரவணமுத்து முதலியாருக்கு தௌகித்திரர். (சரவணமுத்து முதலியார் இருபாலை சேனாதிராய முதலியாருடைய சிரேட்ட மாணவரும், தவத்திரு ஆறுமுக நாவலருக்கு தமிழ் கற்பித்த நல்லாசிரியரும் ஆவார்). கைலாசபிள்ளை இந்தியாவில் வசித்தபோது வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோவை என்ற சிறு காப்பியத்தைப் பாடினார். இக்கோவையில் உள்ள ஆசிரியப் பாக்களெல்லாம் கல்லாடம் முதலிய சங்கநூற் செய்யுட்கள் போன்றன. சில தோத்திரரூபமாகவும், சில அகப்பொருட்டுறைகளாகவும் அமைந்துள்ளன. இவருக்கு 1911 ஆம் ஆண்டில் ஐந்தாம் சியார்ச் மன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு இலங்கையின் ஆளுநரால் "இராசவாசல் முதலியார்" பட்டம் வழங்கப்பட்டது.
 

மும்மணிக்கோவை வடதிருமுல்லைவாயில் மும்மணிக்கோவை

சபாபதி நாவலர் Sabapathy Navalar (1846 - 1903):
 

அந்தாதி திருச்சிற்றம்பலயமக அந்தாதி
திருவிடைமருதூர் பதிற்றுப்பத்தந்தாதி
மாவை அந்தாதி
அமிருதம் சிவகர்ணாமிர்தம்
மாலை வடகோவைச் செல்வ விநாயகர் இரட்டை மணிமாலை
நிராகரணம் ஏசுமத சங்கற்ப நிராகரணம்
பதிகம் நல்லை சுப்பிரமணியக் கடவுள் பதிகம்
புராணம் சிதம்பர சபாநாதர் புராணம்
பிரகாசிகை திராவிடப் பிரகாசிகை
சங்கிரகம் பாரத தார்ப்பரிய சங்கிரகம்


சரவணமுத்தன் அ. - A Saravanamuththan (1890 - 1930):
 

தோத்திரம் கதிர்காம வேலவர் தோத்திரமஞ்சரி
பதிகம் மாமாங்கப் பிள்ளையார் பதிகம்
வெண்பா சனி வெண்பா


சிற்றம்பலப் புலவர் - Sittambalapulavar 18ம் நூற்றாண்டு:
 

தூது கண்டி அரசன் கிள்ளை விடுதூது


சின்னத்தம்பிப் புலவர், இணுவில் - Inuvil Sinnathamby Pulavar 19ம் நூற்றாண்டு:
 

தூது
காலிங்கராயன் பஞ்சவன்னத் தூது Click here to read
பதிகம் இணுவைச் சிவகாமசுந்தரி பதிகம்
புராணம் இளந்தாரி புராணம்


சின்னத்தம்பிப் புலவர், நல்லூர் - Nallur Sinnathamby Pulavar 18ம் நூற்றாண்டு:

அக்காலத்திலே குலத்தாலும் செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கிய வில்லவராய முதலியார் என்பவர் ஒருவர் நல்லூரில் இருந்தார். கூழங்கைத் தம்பிரான் இவ்வில்லவராயர் முதலியார் வீட்டிலே இராக்காலத்திலே வித்தியாகால§க்ஷபஞ் செய்து வந்தனர். முதலியார் புத்திரன், தம்பிரான் கால§க்ஷபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர் என்றால் அப்புத்திரனுடைய விவேகம் இவ்வளவென்று சொல்லவேண்டுமா? ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து,

பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்

நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை

வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்

வாசலிடைக் கொன்றை மரம்.


என்று கூறினர். அதுகேட்ட புலவர் அப்புத்திரனாரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமெனக் கூறிக் கட்டித்தழுவி உச்சி மோந்து சென்றனர். அப்புத்திரனாரே சின்னத்தம்பிப் புலவர். அவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரஞ் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறைசையந்தாதி பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் என்பவர் சொல்லிய மேல்வருங்கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது:

செந்தா தியன்மணிப் பூம்புலி யூரரைச் சேர்ந்துநிதம்

சிதா தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்

நந்தா வளஞ்செறி நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்

அந்தாதி மாலையை வேதாட வேசர்க் கணிந்தனனே.
 

அந்தாதி கல்வளை அந்தாதி

மறசை அந்தாதி
கோவை கரவை வேலன் கோவை
பள்ளு பறாளை விநாயகர் பள்ளு

சுப்பையர், யாழ்ப்பாணம் - Suppaiyar 18ம் நூற்றாண்டு:
 

குறவஞ்சி காரைக் குறவஞ்சி
மாலை நல்லை நான்மணிமாலை


செல்லையா பிள்ளை, மானிப்பாய் - Sellaiyah Pillai 19ம் நூற்றாண்டு:
 

நவரத்தினம் முத்து மாரியம்மன் நவரத்தினம்
பதிகம் ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம்


சேனாதிராய முதலியார் - Senathiraya Muthaliyar (1750 - 1840):

இருபாலை நெல்லைநாதர் புத்திரராகிய சேனாதிராய முதலியார் ஒல்லாந்த ஆங்கில பாஷைகளும் வல்ல தமிழ்ப் பண்டிதர். இவர் ஒல்லாந்த அரசிலும் ஆங்கில அரசிலும் துவிபாஷிகராய் (இருமொழி வல்லவராய்) இருந்தவர்.
 

அந்தாதி நல்லை அந்தாதி
ஊசல் ஊஞ்சற் பாட்டு
வெண்பா நல்லை வெண்பா
நீராவிக் கலிவெண்பா
குறவஞ்சி ஒகுல மலைக் குறவஞ்சி
நல்லைக் குறவஞ்சி


சோமசுந்தரப் புலவர் (நவாலியூர்) - Somasunthara Pulavar (1878 - 1953):

ஏறக்குறைய பதினையாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலி என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் கதிர்காமர், இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தவர். நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ், இலக்கண இலக்கியங்களைக் கற்றவர்.


அந்தாதி தில்லை அந்தாதி
கலம்பகம் அட்டமுகிக் கலம்பகம்
வெண்பா கதிரைச் சிலேடை வெண்பா
பதிகம் கழையோடை வேற் பதிகம்


ஞானப்பிரகாச சுவாமிகள் - Gnanapirakasa Swamikal:
 

பிள்ளைத்தமிழ் செங்குந்தர் பிள்ளைத்தமிழ்


ஞானப்பிரகாச தேசிகர், யாழ்ப்பாணம் - Gnanapirakasa Thesikar 17ம் நூற்றாண்டு:
 

சிகாமணி சித்தாந்த சிகாமணி

நாகேசையர், இ. வட்டுக்கோட்டை I. Nagesaiyer ( - 1862):
 

கோவை அடைக்கலங் கோவை

தம்பிமுத்துப்பிள்ளை - Thampimuthupillai (19ம் நூற்றாண்டு):
 

கும்மி பாலியர் கும்மி (1886)


தாமோதரம் பிள்ளை, சி.வை. - C V Thamotharampillai (1832 - 1901):
 

கட்டளைக்கலித்துறை கட்டளைக்கலித்துறை
மகத்துவம் சைவ மகத்துவம்
மாலை நட்சத்திர மாலை
வசனம் சூளாமணி வசனம்


நயினாதீவு வே. க. நாகமணிப்புலவர்: (1902)
 

யாழ்ப்பாணத்தில் பிரபல தர்மசீலராக விளங்கிய திரு. வை. வல்லிபுரம் அவர்களால் பெரியகடை முச்சந்தியில் கட்டுவித்த "கெங்கா சத்திரத்தின்" பேரில் காரைதீவில் இருந்து வரும் வழி மார்க்கங்களைக் குறித்து, நயினாதீவு வரகவி திரு. வே. க. நாகமணிப் புலவர் அவர்களால் 1902 இல் பாடப்பெற்றது "வழிநடைச்சிந்து". இந்நூல் நயினாதீவு வே. க. த. சுப்பிரமணியம் அவர்களால் ஸ்ரீ கணேச யந்திரசாலையில் 1934 இல் பதிப்பிக்கப்பெற்றது.

சிந்து வழிநடைச்சிந்து


பூபாலபிள்ளை - Poobalapillai (1856 - 1921):
 

அகவல் அரசடி விநாயகர் அகவல்
அந்தாதி மகாமாரியம்மன் அந்தாதி
எண்செய்யுள் நல்லிசை நாற்பது
கலிவெண்பா கணேசர் கலிவெண்பா
தோத்திரம் சிவதோத்திரம்
பதிகம் கதிரேசன் பதிகம்
சித்திவிக்கினேசுவரர் பதிகம்
செல்வ விநாயகர் பதிகம்
திருமுருகர் பதிகம்
புளியநகர் ஆனைப்பந்தி விக்கினேசுவரர் பதிகம்
புராணம் சீமந்தினி புராணம்
மாலை சிவமாலை
மான்மியம் விநாயக மான்மியம்

பேதுறுப்புலவர், தெல்லிப்பழை - Pethuru Pulavar 18ம் நூற்றாண்டு:
 

பள்ளு ஞானப்பள்ளு

பேரம்பலப்புலவர் - Perampala Pulavar (1859 - 1938):

இவர் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களின் தாய்வழிப் பாட்டனாராவார். சுன்னாகம் குமாரசாமிப்புலவர் போன்ற பேரறிஞர்களால் பாராட்டப்பட்டவர்.
 
அந்தாதி கடம்பர் யமக அந்தாதி
இரட்டை மணிமாலை வேலணை இலந்தைக் காட்டுச் சித்தி விநாயகர் இரட்டை மணிமாலை
வெண்பா வண்ணைச் சிலேடை வெண்பா

பொன்னம்பல பிள்ளை , மாவை - Ponnambala Pillai 19ம் நூற்றாண்டு:
 

அந்தாதி மாவை அந்தாதி
சித்திரக்கவி சித்திரக் கவி
மகிமை திருக்கேதீச்சுர மகிமை

மயில்வாகனப் புலவர், மாதகல் - Mayilvagana Pulavar (1779 - 1816):

கூழங்கைத் தம்பிரானிடத்துத் தமிழ் இலக்கண இலக்கியங்களும் சித்தாந்த சாத்திரங்களும் கற்றவர்கள் அனேகர். அவர்களுள்ளே மாதகல் மயில்வாகனப் புலவரும் இருபாலை நெல்லைநாதரும் சிறந்தோர். இம்மயில்வாகனப் புலவருடைய புலமைக்கும் வாக்கு வன்மைக்கும் நிகர் கூறுவதெளிதன்று. அவர் சுன்னாகத்து அந்தணர் திலகரும் கவீந்திரருமாகிய வரதராசபண்டிதர் செய்த சிவராத்திரி புராணத்துக்குச் சொன்ன,

"பரத ராசனுய ரசல ராசனுமை


பங்க நண்புதரு பண்புசேர்


விரத ராசசிவ நிசியி நீள்சரித


மிகவிளங் கிடவி ளம்பினான்


கரத ராச¨னெயு மொழிய ரங்கனருள்


கருணை மாரிநிகர் பரிணிதன்


வரத ராசன்மறை வாண ராசனியல்


மதுர வாசகவி ராசனே."

என்னும் பாயிரம் அவர் வன்மையை நன்கு விளக்கும்.
 

அந்தாதி புலியூர் யமக அந்தாதி
மாலை யாழ்ப்பாண வைபவ மாலை

 

மாப்பாண முதலியார், எழுதுமட்டுவாள் - Mappaana Muthaliyar 19ம் நூற்றாண்டு:
 

விதி ஆசூச விதி

முருகேசப் பண்டிதர், சுன்னாகம் - Chunnakam Murukesa Pandithar 19ம் நூற்றாண்டு:
 

வெண்பா குடந்தை வெண்பா


முத்துக்குமார சுவாமிகள் - Muthukumara Swamikal 19-20ம் நூற்றாண்டு:
 

அந்தாதி கதிர்காமத்தந்தாதி
மாலை கதிர்காம மாலை


வரதராச பண்டிதர், சுன்னாகம் - Chunnakam Varatharasa Pandithar - 18-19ம் நூற்றாண்டு:
 

புராணம் சிவராத்திரிபுராணம்


மொட்டை வேலாப் போடியார் - Mottai Velaapodiyaar (1804 - 1880):
 

பள்ளு தம்பிலுவிற் பள்ளு

விபுலாநந்தர் - Swami Vipulanandar (1892 - 1947):
 

சூளாமணி மதங்க சூளாமணி


வேலுப்பிள்ளை க. வயாவிளான் - Kalladi Veluppillai (1860 - 1944):
 

பதிகம் சிங்கை முருகேசர் பதிகம்

வேலுப்பிள்ளை, திருகோணமலை - Veluppillai 19ம் நூற்றாண்டு:
 

கும்மி திறான்ஸ்வால் யுத்தக் கும்மி


வேலுப்பிள்ளை, வட்டுக்கோட்டை Vaddukkoddai Veluppillai:
 

அந்தாதி திருத்தில்லை நிரோட்டக யமக அந்தாதி

வேற்பிள்ளை, க. - K Vetpillai (1847 - 1930):
 

சதகம் ஈழமண்டல சதகம்
தோத்திரம் புலோலி பர்வதவர்த்தினியம்மை தோத்திரம்
புலோலி வைரவக் கடவுள் தோத்திரம்

வைத்தியநாத தம்பிரான், யாழ்ப்பாணம் - Vaithiyanatha Thampiran 17ம்நூற்றாண்டு:
 

புராணம் வியாக்கிரத புராணம்

வைத்தியலிங்க பிள்ளை, வண்ணார்பண்ணை - Vaithiyalingapillai 19ம் நூற்றாண்டு:
 

ஊசல் சித்தி விநாயகர் ஊசல்
விருத்தம் நல்லை வடிவேலர் ஆசிரிய விருத்தம்


வைத்தியலிங்கம், க. வண்ணார்பண்ணை - K Vaithiyalingam 19-20ம் நூற்றாண்டு:
 

கோவை வண்ணை வைத்தீசர் ஒரு துறைக் கோவை
தோத்திரம் தோத்திர மஞ்சரி


வைத்திலிங்கம் பிள்ளை, ச. வல்வை - Vaithilingam Pillai (1843 - 1901):
 

வல்வெட்டித்துறையில் பிறந்த சங்கரநாதர் வைத்திலிங்கம்பிள்ளை உடுப்பிட்டி சிவசம்பு புலவரின் மாணாக்கர். பாரதி நிலைய முத்திராட்சகசாலை (அச்சகம்) நிறுவியதோடு, ஒரு தமிழ் பாடசாலையையும் நடத்தினார். 1878இல் "நிம்பியாகப் பொருள்" என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார். "சூரபத்மன்" என்ற நூலுக்கு உரை எழுதினார். "சைவ அபிமானி" என்ற பத்திரிகையை பாரதி நிலையத்தினூடாக மாதமொருமுறை இவர் வெளியிட்டார்.
 

முறை செல்வச் சந்நிதி முறை
நிகண்டு சிந்தாமணி நிகண்டு (1876)
பதிகம் வல்வை வைத்தியேசர் பதிகம்
புராணம் சாதி நிர்ணய புராணம்


20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள்
 

பொருளடக்கம்:
 

  1. இளமுருகனார், சோ. (1908 - 1975)
  2. கனகசபாபதி, வே. (1919 - 1993)

 

இளமுருகனார், சோ. - S. Ilamuruganar (11/06/1908 - 17/12/1975):
 

இவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மூத்த புதல்வர். நவாலியூர் சோ. நடராசனின் தமையனார். பண்டிதை பரமேஸ்வரியின் கணவர். வவுனியா பண்டிதர் சு. இராஜ ஐயனார் முதலானோரிடம் தமிழ் கற்றவர்.
 

புராணம்

திருத்தண்ணச் சுந்தர புராணம்
கப்பற்பாட்டு உசன்பதித் திருமுருகன் கப்பற்பாட்டு


கனகசபாபதி, வே. - V. Kanagasabapathy (15/11/1919 - 22/3/1993):

 
சரிதம் சாவித்திரி சரிதம்
போற்றிப்பத்து காயாரோகணர் போற்றிப்பத்து
நீலாயதாட்சிப் போற்றிப்பத்து
திருவூஞ்சல் வயிரவ சுவாமி திருவூஞ்சல்
பிரார்த்தனைப்பத்து வயிரவ சிவாமி பிரார்த்தனைப்பத்து
மாலை தோத்திரப் பாமாலை



தொகுப்பு: கனக ஸ்ரீதரன், சிட்னி, அவுஸ்திரேலியா

உசாத்துணை நூல்கள்:

யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)

சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)

இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)
 

குறிப்பு: இப்பட்டியல் முற்றுப் பெற்றதல்ல. இப்பட்டியலில் இடம்பெறாத புலவர்களின் விவரங்களைத் தயவு செய்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைப்பின், அவற்றை உடனடியாக இணைக்கலாம். நன்றி.

Home Page Arumuga Navalar's home page Yogaswami's Page

Return to Top